நாடு கடந்த குற்றங்களைக் கையாள்வதில் மலேசியா- சீனா மீண்டும் உறுதி!
- Muthu Kumar
- 12 Sep, 2025
பண்டார் ஹிலிர், செப். 12-
ஆள் கடத்தல், இணையக் குற்றம், போதைப்பொருள், பயங்கரவாதம் மற்றும் பணமோசடி போன்ற நாடு கடந்த குற்றங்களைக் கையாள்வதில் மலேசியாவும் சீனாவும் தங்களின் வலுவான உறவையும் கடப்பாட்டையும் மீண்டும் உறுதிப்படுத்தின.
நாடு கடந்த குற்றங்கள் குறித்த 19ஆவது ஆசியான் அமைச்சர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக, உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நகத்தியோன் இஸ்மாயில், சீனாவின் பொதுப் பாதுகாப்பு துணை அமைச்சரும் தேசிய குடிநுழைவு நிர்வாகத்தின் ஆணையருமான வாங் சின்சொங் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது. இந்த உறுதிப்பாடு வலியுறுத்தப்பட்டது.
ஆசியான் அமைச்சர்கள்-சீனா வழிமுறையின் கீழ் திறன் மேம்பாடு, கூட்டுப் பயிற்சி மற்றும் தகவல் பகிர்வு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, நாடுகடந்த குற்றங்கள் தொடர்பான ஆசியான்-சீனா செயல் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஒத்துழைப்பை மலேசியா வரவேற்பதாக, நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், டத்தோஸ்ரீ சைஃபுடின் நகத்தியோன் குறிப்பிட்டார்.
மேலும், வட்டார அமைதி,நிலைத்தன்மை மற்றும் செழிப்பைப் பாதுகாக்க, நாடு கடந்த குற்றங்கள் குறித்த கடப்பாட்டைக் கொண்டுள்ள பணிக்குழுக்கள், போலீஸ் குழு பரிமாற்றங்கள்,உபகாரச்சம்பளங்கள், குற்றத் தடுப்புக்கான கூட்டு ஆராய்ச்சி ஆகியவற்றின் மூலம் சீனாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை மலேசிய தெரிவித்துள்ளது.
அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ அவாங் அலிக் ஜெமான். தற்காப்பு பிரிவு துணைச் செயலாளர் முஹமட் அஸ்லான் ரசாலி மற்றும் குடிநுழைவுத் துறையின் விவகாரப் பிரிவு துணைச் செயலாளர் ஹெபாட் ஹிஷாம் முஹமட் யூசோப் ஆகியோர் அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



