மலேசியா - சிங்கப்பூர் வெறும் நட்பு நாடுகள் அல்ல... ஒரே குடும்பம்! - அன்வார்
- Shan Siva
- 06 Dec, 2025
கோலாலம்பூர், டிச 6: மலேசியா மற்றும் சிங்கப்பூர் தலைவர்களிடையே நெருக்கமான ஒத்துழைப்பு, ஆழமான கலந்துரையாடல்கள் மற்றும் முழு நம்பிக்கையுடன் தொடர்ச்சியான ஈடுபாடு ஆகியவை அவசியம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
மலேசியாவும் சிங்கப்பூரும் வெறும் நட்பு நாடுகள் மட்டுமல்ல, கடந்த ஆறு தசாப்தங்களாக நிறுவப்பட்ட நெருக்கமான இராஜதந்திர உறவுகள் மூலம் குடும்பம் போல, ஒன்றையொன்று சார்ந்து, ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கும் நெருங்கிய அண்டை நாடுகள் என்று அவர் கூறினார்.
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் தாமும் இணைந்து உருவாக்கிய ஒவ்வொரு சாதனையிலும் பெருமை கொள்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
இந்த உந்துதல் மலேசியா-சிங்கப்பூர் உறவுகளை தொடர்ந்து வலுப்படுத்தும் என்றும், இரு நாட்டு மக்களின் நலனுக்காக மேலும் ஒத்துழைப்புக்கு வழி வகுக்கும் என்றும் நம்புவதாக அவர் தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



