மலேசியா - இந்தோனேசியா எல்லை விவகாரம்! - நாடாளுமன்றத்தில் இன்று விளக்கம்! - அன்வார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 4: மலேசியா–இந்தோனேசியா எல்லை நிர்ணயம் தொடர்பான விவகாரத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு விளக்கம் அளிக்க, இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறும் சிறப்பு விளக்கக் கூட்டத்தில் விரிவான விளக்கம் அளிக்கவிருப்பதாக  பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இந்த விளக்கம் அனைத்து மலேசியர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள தவறான புரிதல்களை சரிசெய்வதே இதன் நோக்கம் என்றும் அவர் கூறினார்.

மலேசியா, எல்லை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக தனது நிலப்பரப்பை இந்தோனேசியாவுக்கு ஒப்படைத்ததாக வெளியான தகவல்களை தொடர்ந்து இந்த விளக்கம் அளிக்கப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகளை அன்வார் பலமுறை மறுத்துள்ளார்.

ஜனவரி மாத இறுதியில், 5,000 ஹெக்டேருக்கும் அதிகமான நிலத்தை மலேசிய அரசு இந்தோனேசியாவுக்கு வழங்கியதாக கூறப்பட்ட தகவல்கள் தவறானவை என்றும், எந்த நிலப்பரப்பும் ஒப்படைக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், இந்தோனேசியாவுடன் நில எல்லை தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் நடைபெற்று வருவதாகவும், சட்டப்படி மட்டுமே இந்த விவகாரம் கையாளப்பட்டு வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இறுதியான முடிவு எதுவும் இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனுடன் தொடர்பாக, மலேசிய எல்லைக்குள் சில இந்தோனேசிய கிராமங்கள் உள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து தெளிவுபடுத்த, இயற்கை வளம்  மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அமைச்சரவை விரிவான விளக்கம் கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *