டிரம்பின் விடாமுயற்சியையும் துணிச்சலையும் மலேசியா போற்றும் - அன்வார்!
- Muthu Kumar
- 26 Oct, 2025
கோலாலம்பூர், அக் 26:
இன்று கம்போடியா-தாய்லாந்து கூட்டு அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்னதாக, பிரதமர் அன்வார் இப்ராஹிம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தமது உரையாடலைப் பகிர்ந்து கொண்டார்.தமக்கும் டிரம்பிற்கும் நிறைய பொதுவான விஷயங்கள் உள்ளன என்று அன்வார் குறிப்பிட்டார்.
நான் சிறையில் இருந்தேன், நீங்கள் கிட்டத்தட்ட அங்கு வந்துவிட்டீர்கள் என்று அவர் நகைச்சுவையாகக் கூறினார்.டிரம்பின் விடாமுயற்சியையும் துணிச்சலையும் மலேசியா போற்றுவதாகவும் அன்வார் கூறினார், உலகிற்கு உறுதியுடன் அமைதியை ஆதரிக்கும் தலைவர்கள் தேவை என்றும் குறிப்பிட்டார்.அதை அடைய, இன்று நீங்கள் செய்தது போல், சில நேரங்களில் சில விதிகளை மீற வேண்டியிருக்கும் என்று அவர் கூறினார்.
அமெரிக்க அதிபர் வந்தபோது, அவர் என்னை தனது காரில் தன்னுடன் சேர்ந்து வர அழைத்தார். அது பாதுகாப்பு மற்றும் நெறிமுறை விதிகளுக்கு எதிரானது என்று நான் அவரிடம் சொன்னேன் - அவற்றை மீறுவதில் அவர் மகிழ்ச்சியடைந்தார் என்று அன்வார் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



