மின்னியல் உபரிப்பாக நிறுவனத்தை உருவாக்க மலேசியா இலக்கு கொண்டுள்ளது!
- Muthu Kumar
- 25 Jul, 2025
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 25-
உலகளாவிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை இயக்கும் பன்னாட்டு நிறுவனம், எம்.என்.சி-ஆக மாறும் மின்னியல் உபரிப்பாக நிறுவனத்தை உருவாக்க மலேசியா இலக்கு கொண்டுள்ளது.
ஆகவே, எதிர்காலத்தில் மலேசியா, சிங்கப்பூர், ஆசியான் மின்னியல் உபரிப்பாக பன்னாட்டு நிறுவனங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு கொள்கைகள் வடிவமைக்கப்பட வேண்டும் என்று முதலீடு, வர்த்தக மற்றும் தொழில்துறை துணை அமைச்சர் லியூ சின் தோங் தெரிவித்தார்.
கடந்த ஆண்டில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தேசிய மின்னியல் உபரிப்பாக வியூகம், என்.சி.சி-ஐ வெளியிட்டபோது, நாட்டின் நிலைப்பாடு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டதாக லியூ கூறினார்.
மின்னியல் உபரிப்பாக கண்டுபிடிப்பு, உற்பத்தி சிறப்பு மற்றும் மேம்பட்ட திறமை மேம்பாட்டிற்கான உலகளாவிய மையமாக மலேசியாவை நிலைநிறுத்த,அந்த வியூகம், துணிச்சலான, எதிர்கால நோக்கமுடைய கொள்கையாகும். "மேலும், 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நாம் இருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். நாம் முன்னிலைப்படுத்த முடிந்தால், வட்டாரத்தை மட்டுமல்ல. உலகளவில் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என்பது ஒரு முக்கியமான விஷயமாகும்.
மலேசியாவின் அதிநவீன மின்னியல் உபரிப்பாக சுற்றுச்சூழல் அமைப்பு, மலேசியாவில் தயாரிக்கப்பட்ட ஒப்பந்த சேவை உற்பத்தியிலிருந்து மலேசிய தொழில்நுட்பங்களின் படைப்புகளான மலேசியாவின் புதிய முக்கியத்துவத்திற்கு மாறுவதற்கு நன்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. மேலும், மலேசிய நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களாக வளர வேண்டும்.
உலகிற்கு புதுமையான தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்றார் அவர்.நேற்று, பெட்டாலிங் ஜெயாவில், 2025ஆம் ஆண்டு ஆசியான் மின்னியல் உபரிப்பாக உச்சநிலை மாநாட்டில் உரையாற்றியபோது லியூ அவ்வாறு தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



