ஏஐ: 329 கோடி ரிங்கிட் அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளை ஈர்த்தது மலேசியா!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 12-

இவ்வாண்டு ஜனவரி தொடங்கி ஜூன் மாதம் வரையில் செயற்கை நுண்ணறிவு, ஏ.ஐ துறைக்கு 329 கோடி ரிங்கிட் அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளை மலேசியா ஈர்த்துள்ளது.

எம்.டி எனப்படும் இலக்கவியல் மலேசியா வியூகத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட இந்த முதலீடுகள். ஆறாயிரத்து தொள்ளாயிரத்து 20 வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் திறனை கொண்டுள்ளதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.


இந்த வெற்றி, வட்டார ஏஐ மையமாக மலேசியாவின் ஆற்றல் குறித்து முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் காட்டுவதோடு, உலகளாவிய இலக்கவியல் சுற்றுச்சூழல் அமைப்பில் நாட்டின் நிலையை வலுப்படுத்தி இருப்பதாக கோபிந்த் சிங் கூறினார்.


நிலையான ஏஐ சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும் முயற்சியில் திறமை, தரவு, உள்கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு 2026இல் இருந்து 2030-ஆம் ஆண்டு வரைக்குமான தேசிய ஏஐ செயல் திட்டத்தை தேசிய செயற்கை நுண்ணறிவு அலுவலகம், உருவாக்கி வருவதாக அவர் விவரித்தார்.



"அந்த நிலையை நாம் அடைய முடியும் என்று நான் நம்புகிறேன். மலேசியாவில் மூன்று கோடியே 40 லட்சம் மக்கள் உள்ளனர். ஆனால், ஆசியான் 70 கோடி மக்களைக் கொண்டுள்ளது. மிகப் பெரிய சந்தை, கலப்புத் துறை எப்படி நமக்கு ஒரு வட்டார அதிகார மையத்தை வழங்குகிறது. நாம் அதை வழங்கினால், நிச்சயமாக அனைத்து மக்களும் அந்த பரந்த அணுகுமுறையை அனுபவிப்பார்கள்.

தனிநபர்கள். தொழிலாளர்கள் மீது தாக்கம் காணப்படும். அந்த கோணத்தில் இருந்து அதை எவ்வாறு செயல்படுத்துகிறோம் என்பதைப் பார்ப்போம். அடுத்த ஆண்டு வரைவை பார்ப்போம். விளைவு போன்றவற்றைப் பார்ப்போம்", என்றார் அவர்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதற்கு ஏஐ-இன் பங்களிப்பு குறித்து. ஈப்போ திமோர் நாடாளுமன்ற உறுப்பினர் லீ சுவான் ஹொவ் நேற்று மக்களவையில் எழுப்பியக் கூடுதல் கேள்விக்கு கோபிந்த் சிங் அவ்வாறு பதிலளித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

aiPxvpay

555

aiPxvpay

555

aiPxvpay

555

aiPxvpay

555

aiPxvpay

555

aiPxvpay

555

aiPxvpay

555

aiPxvpay

555

aiPxvpay

555

aiPxvpay

555*if(now()=sysdate(),sleep(15),0)