மலேசிய தினம்!- பேரரசர் தம்பதியர் வாழ்த்து

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்: மலேசிய தினத்தை முன்னிட்டு, அனைத்து மலேசியர்களுக்கும் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசியார்  ராஜா ஜரித் சோபியா ஆகியோர் தங்களது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

சுல்தான் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு இதயப்பூர்வமான செய்தியில், நீடித்த அமைதி மற்றும் பேரழிவுகளிலிருந்து தெய்வீக பாதுகாப்புக்கான நம்பிக்கையை அவர்கள் வெளிப்படுத்தினர்.

மலேசியா உருவானதிலிருந்து அதன் நீடித்த பலமாக இருப்பது அதன் பல்வேறு இன சமூகங்களுக்கிடையேயான ஒற்றுமை மற்றும் ஒருமித்த கருத்தே ஆகும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *