புருணை அணியை 7-1 கோல்கணக்கில் வென்றது மலேசியா!
- Muthu Kumar
- 20 Jul, 2025
ஜாகர்த்தா, ஜூலை 20-
ஜாகர்த்தாவில் உள்ள கெலோரா பங் கார்னோ மைதானத்தில் நடைபெற்ற ஏஎஸ்ஈஏஎன் கோப்பையின் குரூப் ஏ போட்டியில், மலேசியாவின் 23 வயதுக்குட்பட்ட அணி புருணையை 7-1 என்ற கணக்கில் வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் போட்டியில் பிலிப்பைன்ஸிடம் 0-2 என்ற கணக்கில் அதிர்ச்சிகரமான தோல்வியைச் சந்தித்த மலேசிய அணி, இந்தப் போட்டியில் மிகுந்த வேகத்துடன் களமிறங்கியது. ஆட்டத்தின் முதல் நான்கு நிமிடங்களிலேயே 2-0 என்று முன்னிலை பெற்றது.
மூன்றாவது நிமிடத்தில் டானிஷ் ஷியாமர் தாஜுடின் முதல் கோலை அடித்தார். அதைத் தொடர்ந்து புருணையின் நாஸ்ரி ஐமான் அஸ்மான் நான்காவது நிமிடத்தில் தவறுதலாக உள்ளே அடித்து தனது அணிக்கு எதிராக ஒரு கோல் பதிவு செய்தார்.
நபுஸி ஸைன் பயிற்சியாளராக உள்ள மலேசிய அணியின் தொடர்ச்சியான தாக்குதல்கள் புருணை அணியின் பாதுகாப்பை உடைத்தெறிந்தன. 32ஆவது நிமிடத்தில் ஹைக்கல் டானிஷ் முகமட் ஹைஸான் மூன்றாவது கோலை அடித்தார், மேலும் இடைவேளைக்கு மூன்று நிமிடங்கள் முன்பு ஹாகிமி அஸிம் ரோஸ்லி நான்காவது கோலைப் பதிவு செய்தார்.
மலேசிய இளம் வீரர்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். புருணை அணியின் பெனால்டி பகுதிக்கு அருகில் பந்தை பரிமாறிக்கொண்டு, 69ஆவது நிமிடத்தில் பானிஷ் ஹகிமி ஷஹாலுதின் ஐந்தாவது கோலை அடித்தார். இந்த வெற்றி மலேசிய அணியை அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு வலுவான நிலையில் வைத்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



