இஸ்ரேலுக்கு மலேசியா கண்டனம்!
- Shan Siva
- 17 Jul, 2025
இந்த
தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழப்பு ஏற்பட்டதோடு, பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் அதிபர் மாளிகைக்கு அருகிலுள்ள
பகுதிகள் உட்பட முக்கிய அரசாங்க இடங்களை குறிவைத்துள்ளனர்.
இந்தத்
தாக்குதல்கள் சர்வதேச சட்டம் மற்றும் இஸ்ரேலுக்கும் சிரியாவிற்கும் இடையிலான 1974
ஆம் ஆண்டு விலகல் ஒப்பந்தத்தின் தெளிவான மீறலாகும் என்று அன்வார் கூறினார்.
கடந்த
பத்தாண்டுகளில் சிரியா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மலேசியா சிரியாவுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளது என்றார்.
மேலும்ம் இதுபோன்ற
மீறல்களை உடனடியாக நிறுத்தி மனிதாபிமானக் கொள்கைகளுக்குத் திரும்புமாறு சம்பந்தப்பட்ட
தரப்பினரை மலேசியா வலியுறுத்துவதாக அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



