காஸாவில் மருத்துவமனை மீது தாக்குதல்! இஸ்ரேலுக்கு மலேசியா கண்டனம்
- Shan Siva
- 28 Aug, 2025
புத்ராஜெயா, ஆக. 28: இம்மாதம் 25ஆம் தேதி காஸாவின் கான்
யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேலிய இராணுவம் நடத்திய வான்வழி தக்குதலுக்கு மலேசியா தனது கண்டனத்தைப் பதிவு
செய்துள்ளது.
இந்தத் தாக்குதலில் மருத்துவப் பணியாளர்கள் மற்றும்
பத்திரிகையாளர்கள் உட்பட குறைந்தது 20 பேர்
உயிரிழந்தோடு மேலும் பலர் காயமடைந்தனர்.
இஸ்ரேலின் இச்செயலுக்கு மலேசியா தனது
கடுமையான எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்துவதாக வெளியுறவு அமைச்சு ஓர் அறிக்கையில்
தெரிவித்தது.
மேலும், இந்தத் தாக்குதல் மூலம்
நான்காவது ஜெனீவா மாநாடு மற்றும் மருத்துவமனைகள், ஊடகங்கள் மீதான தாக்குதல்களைத்
தடைசெய்யும் அனைத்துலக மனிதாபிமானச் சட்டம் உள்ளிட்ட அனைத்து சட்டங்களையும்
அப்பட்டமாக மீறியிருப்பதால், இது போர்க்குற்றம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்றும் அவர்கள்
தண்டிக்கபப்ட வேண்டும் என்றும்
வலியுறுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டின் இத்தகைய அட்டூழியங்களைத் தடுத்து
நிறுத்தவும் பேரழிவுகளுக்கு முழுமையாகப் பொறுப்பேற்கப்படுவதை உறுதி செய்யவும்
அனைத்துலகச் சமூகம், குறிப்பாக ஐநா
பாதுகாப்பு மன்றம் விரைந்து நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று மலேசியா வலியுறுத்துகிறது.
1967ஆம் ஆண்டுக்கு முந்தைய எல்லைகளின் அடிப்படையில் கிழக்கு ஜெருசலமை தலைநகராகக் கொண்ட ஒரு சுதந்திரமான மற்றும்
இறையாண்மை கொண்ட பாலஸ்தீன அரசை நிறுவ வேண்டும் என்று மலேசியா அனைத்து
தரப்பினரையும் வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



