மலேசியா தற்போது பார்முலா 1 போட்டியை மீண்டும் நடத்த திட்டமிடவில்லை-ஹன்னா இயோ!
- Muthu Kumar
- 22 Aug, 2025
கோலாலம்பூர், ஆக. 22-
மலேசியா தற்போது பார்முலா 1 பந்தயத்தை மீண்டும் நடத்துவதற்கு திட்டமிடவில்லை. இதற்கு முக்கிய காரணம், உயர்ந்த புரவலர் உரிமக் கட்டணம், வசதிகளை அமைப்பதற்கு தேவையான செலவு, பந்தய கால அட்டவணையின் அடர்த்தி ஆகியவையாகும் என விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்தார்.
பார்முலா 1 பந்தயத்தை நடத்துவதற்கு ஆண்டுக்கு சுமார் 300 மில்லியன் ரிங்கிட் உரிமக் கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும், 3-5 ஆண்டு ஒப்பந்தத்திற்கு மொத்தம் 1.5 பில்லியன் ரிங்கிட் வரை செலவாகலாம். இதில், சிப்பாங் பந்தய அரங்க பராமரிப்புக்கு ஆண்டுக்கு 10 மில்லியன் ரிங்கிட் தேவைப்படுகிறது. இந்த நிதியை உள்ளூர் விளையாட்டு மேம்பாட்டிற்கு பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அமைச்சு கருதுவதாக அவர் மேலும் கூறினார்.
இளையோர், விளையாட்டு அமைச்சர் ஹன்னா இயோ, பார்முலா 1 பந்தயத்தை நடத்துவதற்கு ஆண்டுக்கு 300 மில்லியன் ரிங்கிட் உரிமக் கட்டணத்தை பார்முலா 1-இன்
வணிக உரிமையாளரான லிபர்ட்டி மீடியாவுக்கு செலுத்த வேண்டும் என்று கூறினார். இந்த பெரும் தொகையை முதலீடு செய்வதை விட, உள்ளூர் விளையாட்டு வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பது மிகவும் பொருத்தமானது என அவர் வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



