மின்னியல் உபரிபாகத் தயாரிப்புக்கான புதிய சந்தையை மலேசியா ஆராய்ந்து வருகிறது!

top-news
FREE WEBSITE AD

தியான்ஜின், செப். 2-

புதிய மற்றும் பாரம்பரியமற்ற சந்தைகளில் ஊடுருவுவதற்கான பன்முகப்படுத்தப்பட்டுள்ள முயற்சியின் ஓர் அங்கமாக, மின்னியல் உபரிபாகத் தயாரிப்பு தொழில்துறைக்கான புதிய சந்தையை மலேசியா ஆராய்ந்து வருகிறது.

இத்துறையில் சீனா அசாதாரண முன்னேற்றத்தைக் கண்டுள்ளதோடு, மலேசியா அந்நாட்டில் அத்தொழில்துறையைக் கற்கவும், தனது சக பங்காளிகளுடன் ஒத்துழைப்புக்கான வாய்ப்பை ஆராயவும் விரும்புவதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

அறுபது விழுக்காட்டிற்கும் மேற்பட்ட மின்சார மற்றும் மின்னியல் பொருள்களுடன், தென்கிழக்கு ஆசியாவில் ஒரு மின்னியல் உபரியாகத் தயாரிப்பு மையமாக மலேசியா விளங்குவதோடு, நாட்டின் அப்பொருள்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.எனினும், மலேசியா புதிய சந்தைகளைத் தேடிவரும் அதேவேளையில், சீனா மற்றும் ஜப்பானிய நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை மேற்கொண்டு வருவதாக அன்வார் கூறினார்.

இத்துறையில் புதிய திறமைகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் அண்மைய தொழில்நுட்பங்களை எடுத்துக் காட்டாகக் குறிப்பிட்டார்.

இந்நிலையில், சீனா அதற்கான வாய்ப்புகளுக்கு வழிவகுத்துள்ள வேளையில், இன்று செவ்வாய்க்கிழமை சீனாவைத் தளமாகக் கொண்டுள்ள மின்னியல் உபரிபாகத் தயாரிப்புத் துறை பங்கேற்பாளர்கள் அனைவரையும் தாம் சந்திக்கவிருப்பதாக அன்வார் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *