மலேசியா மிகச்சிறந்த துடிப்பான நாடு! - டிரம்ப்
- Shan Siva
- 27 Oct, 2025
கோலாலம்பூர், அக் 27: 47வது ஆசியான் உச்சி மாநாடு மற்றும் தொடர்புடைய தனது
இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பியிருக்கும் அமெரிக்க அதிபர்ன் டிரம்ப்,
மலேசியாவை ஒரு சிறந்த, மிகவும் துடிப்பான நாடு என்று வர்ணித்துள்ளார்.
தனது ட்ரூத்
சோஷியல் கணக்கில் ஒரு பதிவில், 47வது ஆசியான்
உச்சி மாநாடு மற்றும் தொடர்புடைய உச்சிமாநாடுகளை நடத்தும் மலேசியாவுடன் அமெரிக்கா
பெரிய அளவிலான வர்த்தக மற்றும் புவிசார் ஒப்பந்தங்களில்
கையெழுத்திட்டுள்ளதாக டிரம்ப் கூறினார்.
மிக முக்கியமாக,
நேற்று தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும்
இடையிலான அமைதி ஒப்பந்தத்தின் அடையாளத்தையும் தான் கண்டதாகவும் அவர் மேலும்
கூறினார்.
"போர் இல்லை!
மில்லியன் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன. இதைச் செய்திருப்பது மிகவும் பெருமை. இப்போது,
ஜப்பானுக்குப் புறப்படுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



