மலேசிய பாதுகாப்பு வாரியம் நிறுவப்படும் போக்குவரத்து!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 14-

தெலுக் இந்தான், கெரிக் ஆகிய இடங்களில் ஏற்பட்ட விபத்துகள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக நிரந்தர மற்றும் தொழில்முறை விசாரணை அமைப்பாக மலேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம், எம்.தி.எஸ்.பி-ஐ நிறுவுவதற்கான தனது உறுதிப்பாட்டைப் போக்குவரத்து அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

2018 ஆம் ஆண்டு தொடங்கி எம்.தி.எஸ்.பி-ஐ நிறுவுவதற்கான நடவடிக்கை தாமதமாகி வந்தாலும் அதன் திட்ட வரைவு தற்போது அமைச்சு அளவிலான பரிசீலனையில் உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

எம்.தி.எஸ்.பி நிறுவுவது குறித்து ஜெராண்டூட் நாடாளுமன்ற உறுப்பினர் கைரில் நிசாம் கைருடின் எழுப்பிய கூடுதல் கேள்விக்கு அந்தோணி லோக் அவ்வாறு பதிலளித்தார். தெலுக் இந்தானில் நிகழ்ந்த குசுரு உறுப்பினர்களை உட்படுத்திய விபத்து மற்றும் கெரிக்கில் நிகழ்ந்த பேருந்து விபத்து குறித்து விசாரிக்க, சிறப்புப் பணிக்குழுவில் நியமிக்கப்பட்டிருக்கும் ஜெராண்டூட் நாடாளுமன்ற உறுப்பினரின் பங்கையும் லோக் வரவேற்றார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *