மலேசியரான பன்னீர் செல்வத்திற்கு வரும் 8 ஆம் தேதி தூக்கு! - சிங்கப்பூர் அறிவிப்பு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக் 4: 51.84 கிராம் டயமார்பைனை சிங்கப்பூருக்குள் கடத்தியதற்காக மலேசியரான பன்னீர் செல்வத்திற்கு வரும் அக்டோபர் 8 ஆம் தேதி  புதன்கிழமை காலை சிங்கப்பூரில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மரணதண்டனை தேதி குறித்த அறிவிப்பு இன்று குடும்பத்தினருக்கு சிறை அதிகாரிகளால் வழங்கப்பட்டதாக பன்னீர் செல்வத்தின்  சகோதரி ஏஞ்சலியா எஃப்எம்டி ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 4 தேதியிட்ட சிங்கப்பூர் சிறைச்சாலை சேவையின் மூத்த அதிகாரி கையொப்பமிட்ட அந்த அறிவிப்பில், சாங்கியில் உள்ள சிறை இணைப்பு மையத்தில் பன்னீரை அக்டோபர் 7 ஆம் தேதி வரை தினசரி பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்று குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டது.

குடும்ப வழக்கறிஞர் என் சுரேந்திரனும் இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தினார்.

அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கேட்டபோது, ​​கோலாலம்பூரில் உள்ள சிங்கப்பூர் உயர் தூதரகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், விரைவில் விவரங்கள் இறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு, ஜூன் 27 ஆம் தேதி வுட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடியில் 51.84 கிராம் டயமார்பைன் ரக போதைப்பொருளைக் கடத்தியதற்காக சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தால் பன்னிர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில்  அவருக்கு கட்டாய மரண தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி, 39 வயதான கே. தட்சிணாமூர்த்தி,  சிங்கப்பூருக்குள் 44.96 கிராம் டயமார்பைனை கடத்தியதற்காக தூக்கிலிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *