மலேசியர் பன்னிர்செல்வம் தூக்கிலிடப்பட்டார்! சிங்கப்பூர் அரசு தண்டனையை நிறைவேற்றியது
- Shan Siva
- 08 Oct, 2025
கோலாலம்பூர், அக் 8: 2014 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் 51.84 கிராம் டயமார்பைனை நாட்டிற்கு கடத்தியதற்காக 38 வயதான பி. பன்னிர் செல்வம் இன்று தூக்கிலிடப்பட்டார்.
இதை
பன்னிரின் சகோதரி சங்கரி மற்றும் சிங்கப்பூர் ஆர்வலர் கிர்ஸ்டன் ஹான்
உறுதிப்படுத்தியதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
செப்டம்பர்
25 அன்று 39 வயதான கே.
தட்சிணாமூர்த்தி தூக்கிலிடப்பட்ட பிறகு, சிங்கப்பூரில் போதைப்பொருள் குற்றத்திற்காக இரண்டு வாரங்களில் மரண தண்டனை
விதிக்கப்பட்ட இரண்டாவது மலேசியர் பன்னிர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் தேதி உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடியில் 51.84 கிராம் டயமார்பைன் கடத்தியதாக சிங்கப்பூர் உயர்
நீதிமன்றத்தால் ஜூன் 27, 2017 அன்று பன்னிர்
செல்வம் குற்றவாளி எனத்
தீர்ப்பளிக்கப்பட்டார். இதனை அடுத்து அவருக்கு கட்டாய மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அவரது
மேல்முறையீடு பிப்ரவரி 9, 2018 அன்று
மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது, மேலும் சிங்கப்பூர் அதிபரிடம் அவர் தாக்கல் செய்த கருணை மனு
நிராகரிக்கப்பட்டது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



