ரஷ்ய மலையில் மலேசியர் பலி!
- Shan Siva
- 13 Jul, 2026
கோலாலம்பூர், ஜூலை 13: ஐரோப்பாவின் மிக உயரமான மலையான, ரஷ்யாவில் உள்ள எல்ப்ரஸ் மலையில் ஏறும் போது மலேசியர் ஒருவர் உயிரிழந்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் நிறுவனம் ஒன்றால் ஏற்பாடு செய்யப்பட்ட மலையேற்றப் பயணத்தில் பங்கேற்ற மூன்று மலேசியர்களில் அந்த மலையேறுபவரும் ஒருவர் என விஸ்மா புத்ரா கூறியது.
தெற்கு ரஷ்யாவில் உள்ள காகசஸ் மலைத்தொடரில், எல்ப்ரஸ் மலை கடல் மட்டத்திலிருந்து 5,642 மீட்டர் (18,510 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இது ஐரோப்பாவின் மிக உயரமான மலையாகவும், மலையேற்றத்தின் ஏழு சிகரங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.
மாஸ்கோவில் உள்ள மலேசியத் தூதரகம், உயிரிழந்தவரின் குடும்பத்தினருடனும், மலையேற்றப் பயணத்தில் பங்கேற்ற மற்ற இரண்டு மலேசியர்களுடனும், ரஷ்யாவில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் தொடர்பில் இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



