மலேசிய வர்த்தக சங்க சம்மேளனத்தின் தீபாவளி கொண்டாட்டம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ. 2-

மலேசிய வர்த்தக சங்க சம்மேளனம் ஏற்பாடு செய்த தீபாவளி கொண்டாட்டத்தில் தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கலந்து கொண்டார்.பல்வேறு துறைகளை சேர்ந்த வர்த்தக தலைவர்களின் ஒற்றுமை உணர்வை
பார்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதாக செனட்டர் சரஸ்வதி கூறினார்.

வர்த்தக சமூகங்களை ஒன்றிணைப்பதில் மலேசிய வர்த்தக சங்க சம்மேளனம் முக்கிய பங்காற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.இதன் வழி தொழில் முனைவோர்களுக்கு இடையே வர்த்தக வாய்ப்புகள் அதிகரிக்கும்
என்றார் அவர்.

நமது சமூகத்தில் அதிகமானோரை தொழில் முனைவோர்களாக உருவாக்க இந்த சம்மேளனம் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.இந்திய சமூகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இது மிக அவசியம் என அவர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *