மலேசிய ஹாக்கி அணி தைவானை 15-0 என வீழ்த்தியது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப். 3-

மலேசிய ஆடவர் ஹாக்கி அணி, 2025 ஆசியக் கோப்பையில் குழு பி பிரிவின் இறுதி ஆட்டத்தில் தைவானை 15-0 என்ற கோல் கணக்கில் வென்று. தங்களின் உண்மையான ஆற்றலை வெளிப்படுத்தியது. இந்த ஆட்டம், பிஹார் விளையாட்டு பல்கலைக்கழக ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த அபார வெற்றி. பயிற்சியாளர் சர்ஜித் சிங்கின் அணியை குழு பி பிரிவு சாம்பியனாக உறுதி செய்து, சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறச் செய்தது. இதற்கு முன்பு, மலேசியா வங்கதேசத்தையும், நடப்பு சாம்பியனான தென் கொரியாவையும் வீழ்த்தி தங்களின் சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்தது.

மலேசியாவின் கோல் வேட்டைக்கு மொகமட் அகிமுல்லா அனுவார் எசூக் தலைமையேற்றார். இவர் ஐந்து கோல்களை அடித்து அசத்தினார். மொகமட் அஷ்ரான் ஹம்சானி நான்கு கோல்களையும். நோர்சியாபிக் சுமந்திரி மூன்று கோல்களையும் பதிவு செய்தனர். மேலும், முகமது அஸ்ராய் ஐஸாட் அபு கமால், ஆண்டிவால்பியன் ஜெப்ரினஸ், நிக் முகமது ஐமான் நிக் ரோஸ்மி ஆகியோர் தலா ஒரு கோலை அடித்தனர்.

ஆட்டத்தின் தொடக்க விசிலில் இருந்து மலேசியா தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியபோதிலும், முதல் கோல் எட்டாவது நிமிடத்தில் மொகமட் அஷ்ரான் மூலம் பதிவானது. அதன்பின், அகிமுல்லா, நோர்சியாபிக் ஆகியோரின் கோல்கள், முதல் பாதியை 8-0 என்ற வலுவான முன்னிலையுடன் முடித்தன. இந்த வெற்றி, மலேசிய அணியின் அபாரமான ஆட்டத்தையும், சூப்பர் 4 சுற்றில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் திறனையும் வெளிப்படுத்தியது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *