போலீஸாக நடித்து சிங்கப்பூரில் பெண்ணைத் தவறாகப் பயன்படுத்திய மலேசிய ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
- Shan Siva
- 04 Feb, 2026
கோலாலம்பூர், பிப் 4: சிங்கப்பூரில் 2022-ஆம் ஆண்டு, போலீஸ்
அதிகாரியாக நடித்து ஒரு வீட்டு வேலை செய்யும் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக
கூறப்படும் மலேசிய நபர், நேற்று நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை
எதிர்கொண்டார்.
சம்பவம் நடந்த போது, செட்டி
சிங்கப்பூரின் பொது போக்குவரத்து நிறுவனம olan SBS Transit நிறுவனத்தில்
பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது
2022 ஜூலை 11-ஆம் தேதி, மாலை
8 மணியளவில் லிட்டில் இந்தியா MRT நிலையம் அருகே செட்டி இருந்ததாகவும்,
அப்போது புல்வெளியில் கூடியிருந்த குடியேற்ற தொழிலாளர்கள்
குழுவை அவர் அணுகியதாகவும் தெரிவிக்க்கப்பட்டுள்ளது.
அந்த குழுவில், அப்போது 35 வயதான குற்றச்சாட்டுக்குரிய
பெண்ணும், அவரது காதலனும் இருந்துள்ளனர்.
செட்டி, தன்னை போலீஸ் அதிகாரி என கூறி, அங்கிருந்தவர்களிடம் அடையாள ஆவணங்களை கேட்டு விசாரித்ததாக
கூறப்படுகிறது. மூன்று பேர் தங்களின் வேலை அனுமதிப் பத்திரங்களை வழங்கினர்.
அப்போது, அந்த பெண்ணிடம் அடையாளம் கேட்ட செட்டி, அந்தப் பெண்ணிடமிருந்து
சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (Ministry
of Manpower) வழங்கிய வெளிநாட்டு தொழிலாளர் அனுமதி
ஒப்புதல் கடிதத்தையும், அவரது கைபேசியையும் பெற்றுக் கொண்டதாக
அரசு தரப்பு தெரிவித்தது.
பின்னர், மற்றவர்களை அங்கேயே நிற்குமாறு கூறி,
அந்த பெண்ணை தனியாக பின்தொடரச் சொல்லி, புதர்களுள்ள
பகுதிக்குக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
அங்கு, சுற்றிலும் யாரும் இல்லை என்பதை உறுதி
செய்த பின் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளார்.
சம்பவத்திற்குப் பிந்தைய நாளில் பெண்ணை பரிசோதித்த
மருத்துவரும், பெண்ணின் உடல் மற்றும் உடைகளில்
இருந்து செட்டியின் DNA கண்டறியப்பட்டதாக உறுதிபடுத்தப்பட்டது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



