மலேசிய ஆண்கள் இரட்டையர் ஜோடி முதல் சுற்றில் தோல்வி!
- Muthu Kumar
- 24 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 24-
மலேசியாவின் ஆண்கள் பூப்பந்து இரட்டையர் ஜோடியான ஸே பெய்-நூர் இஸ்ஸுதீன் ரும்சானி, சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் முதல் சுற்றில் தோல்வியடைந்து மற்றொரு பின்னடைவைச் சந்தித்தனர். இந்தப் போட்டி சாங்ஜோவில் உள்ள ஒலிம்பிக் விளையாட்டு மைய ஜிம்னாசியத்தில் நடைபெற்றது.
உலக தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்த மலேசிய ஜோடி, உலக தரவரிசையில் 40-வது இடத்தில் உள்ள தென் கொரியாவின் காங் மின் ஹியூக்-கி டாங் ஜூ ஜோடியிடம் தோல்வியடைந்தது. முதல் செட்டை 21-15 என்ற கணக்கில் வென்ற ஸே பெய்-இஸ்ஸுதீன், பின்னர் அடுத்த இரு செட்களில் 15-21, 17-21 என்ற கணக்கில் 56 நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு தோல்வியைத் தழுவினர்.
இந்தத் தோல்வி, ஜப்பான் ஓபனில் தங்கள் சாம்பியன் பட்டத்தைத் தக்கவைக்க முடியாமல். இறுதிப் போட்டியில் தென் கொரியாவின் சென்சேஷனல் ஜோடியான கிம் வோன் ஹோ-சியோ சியுங் ஜே-யிடம் தோல்வியடைந்து, உலகின் முதல் நிலை இரட்டையர் அந்தஸ்தை இழந்ததற்குப் பிறகு மற்றொரு பெரும் அடியாக அமைந்தது.
இந்தத் தொடர் தோல்விகள், ஸே பெய்-இஸ்ஸுதீன் ஜோடிக்குச் சவாலாக இருந்தாலும், அவர்களின் திறமையும் அர்ப்பணிப்பும் எதிர்காலப் போட்டிகளில் மீண்டும் வெற்றிப் பாதைக்கு அவர்களை இட்டுச் செல்லும் என மலேசிய பேட்மிண்டன் ரசிகர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



