தமிழ்நாட்டிற்கு கடத்தப்பட்ட மலேசிய மானிட்டர் பல்லிகள்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 4: கோலாலம்பூரிலிருந்து தமிழ்நாட்டிற்குச் சென்ற ஒரு பயணி தன் லக்கேஜ் பைகளில் மானிட்டர் பல்லிகளை மறைத்து வைத்து நாட்டிற்குள் கடத்த முயன்றபோது பிடிபட்டார்.

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத் துறை அப்பயணியைக் கையும் களவுமாகப் பிடித்தது.

உளவுத்துறையின் தகவலின் பேரில் சுங்கத்துறை சோதனை மேற்கொண்டதில் பல்வேறு உணவுப் பொருட்களுடன் உள்ளே அடைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு மானிட்டர் பல்லிகளையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அதன் வாய்கள் மற்றும் கைகால்கள் ஒன்றாக டேப் செய்யப்பட்டு கருப்பு துணியால் சுற்றப்பட்ட நிலையில் அவை காணப்பட்டன.

இது தொடர்பாக தொடர் விசாரணைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!

Seorang penumpang dari Kuala Lumpur ditahan di Lapangan Terbang Antarabangsa Tiruchirapalli kerana cuba menyeludup dua biawak monitor dalam bagasi. Haiwan itu ditemui dalam keadaan diikat dan disembunyikan bersama makanan. Siasatan lanjut sedang dijalankan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *