தேசிய மோசடி பதிலளிப்பு மையத்திற்கு மலேசிய போலீஸ்படை தலைமையேற்பது உடனடியாக அமல்!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஜூலை 17-

இணைய நிதி மோசடிக்கான பதிலளிப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையாக, அரச மலேசிய போலீஸ் படை, தற்போது தேசிய மோசடி பதிலளிப்பு மையம், என்.எஸ்.ஆர்.சியை அதிகாரப்பூர்வமாக தலைமையேற்பது, உடனடியாக அமலுக்கு வருகிறது.

இணைய நிதி மோசடி சம்பவங்கள் வருத்தமளிக்கும் வகையில் உள்ளதைத் தொடர்ந்து, இந்நடவடிக்கைக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இணக்கம் தெரிவித்ததாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

இணைய மோசடி சம்பவங்களை மிகவும் திறமையாக, சீராக, விரைவாக மேற்கொள்ளப்படுவதை அந்நடவடிக்கை உறுதி செய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சைஃபுடின் அவ்வாறு குறிப்பிட்டார்.

என்.எஸ்.ஆர்.சி-இன் பணிகளை வணிக குற்றப் புலனாய்வுத்துறை, ஜே.எஸ்.ஜே.கே வழிநடத்துவதோடு சம்பந்தப்பட்ட மையத்தில் செயல்பட 139 புதிய பதவிகளும் உருவாக்கப்படும் என்று அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *