மலேசிய கால்பந்து சங்கம் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு விருது பெற்றது!
- Muthu Kumar
- 18 Oct, 2025
ரியாத், அக். 18-
ரியாத்தில் உள்ள கிங் பஹத் கலாச்சார மையத்தில் நடைபெற்ற 29ஆவது ஆசிய கால்பந்து கூட்டமைப்பு விருது வழங்கும் விழாவில் மலேசிய கால்பந்து சங்கம் மேம்பாட்டில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சிறப்பு அங்கீகாரம் பெற்றது. இருப்பினும், ஜொகூர் டாருல் தக்சிம் அணியின்
நட்சத்திர வீரர் அரிப் ஐமான் ஹனாபி, ஆசியாவின் சிறந்த வீரர் விருதை தவறவிட்டார். அல்-ஹிலால் அணியின் சேலம் அல்-தவ்ஸரி 2022ஆம் ஆண்டுக்கு பிறகு இரண்டாவது முறையாக ஆசியாவின் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.மேலும், ஜப்பானின் ஹனா தகாஹஷி ஆசியாவின் சிறந்த பெண் வீராங்கனையாக விருது பெற்றார்.
34 வயதான சேலம், சவுதி அரேபிய லீக்கில் அதிக கோல்கள் அடித்தவராகவும், இந்த சீசனில் 15 கோல்கள் அடித்து சாதனை படைத்தவராகவும் உள்ளார். இந்த விருது விழாவில் மலேசியாவை பிரதிநிதித்த அரிப் ஐமான், ஆசிய கால்பந்து உலகின் பெரிய பெயர்களுடன் இணைந்து நிற்பது குறித்து பெருமிதம் தெரிவித்தார்.
மலேசியாவின் முதல் வீரராக இந்த மேடையில் நிற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கு ஒரு தொடக்கமே. கால்பந்தில் எல்லாவற்றையும் கற்று, எனது கிளப், நாட்டை முடிந்தவரை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன் என்று அரிப் ஐமான் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



