அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அசராமல் செல்லும் மலேசியர்கள்! காசா உதவிகள் தடையின்றி செல்ல அன்வார் வலியுறுத்து

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 30: காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றியும் உடனடியாகவும் செல்ல வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியதாகவும், எந்தத் தடையும் ஏற்கனவே சிக்கலில் இருக்கும் மக்களின் துயரத்தை மேலும் தீவிரப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்ததாகவும் பிரதமரின் முதன்மை செய்தித் தொடர்பாளர் துங்கு நஷ்ருல் அபைதா தெரிவித்துள்ளார்.

காசாவுக்கான குளோபல் சுமுத் ஃப்ளோட்டில்லாவில் பங்கேற்கும் மலேசிய செயற்பாட்டாளர்களின் முன்னேற்றத்தை அன்வார் நெருக்கமாகக் கவனித்து வருவதாக தெரிவித்தார்.

அவர்கள் இப்போது மஞ்சள் மண்டலத்தில் நுழைந்துள்ளனர் என்றும் இஸ்ரேலிய படைகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியா மடானி வடிவமைப்பின் ஒற்றுமை, நீதி என்ற கோட்பாட்டின் அடிப்படையில், அரசு மற்றும் அனைத்து மலேசியர்களும் இந்த மனிதாபிமானப் பணிக்குத் தாராள ஆதரவு அளிக்கிறார்கள்.

இந்தப் பணியில் ஈடுபடும் செயற்பாட்டாளர்களின் துணிவும் மனவலிமையும் மலேசிய மக்களின் கருணை மற்றும் அர்ப்பணிப்பின் வெளிப்பாடாகக் கருதப்படுகின்றன என்று அவர் கூறினார்.

மலேசியர்கள் அனைவரும் ஒன்றுபட்டு பிரார்த்தனை செய்யவும், இந்த உயர்ந்த மனிதாபிமான நோக்கத்துக்கு தொடர்ச்சியான ஆதரவு வழங்கவும் துங்கு நஷ்ருல் கேட்டுக்கொண்டார்.

தற்போது, ‘குளோபல் சுமுத் ஃப்ளோட்டில்லா கிரீஸ் அருகிலுள்ள சர்வதேச கடலில் உணவு, மருந்துகள் மற்றும் சமாதானச் செய்தியுடன் பயணிக்கிறது.

இந்த பணி, போர் மற்றும் பஞ்சம் முடிவடைய வேண்டும் என்றும், காசாவிற்கு மனிதாபிமான பாதை திறக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

மொத்தம் 45 நாடுகளிலிருந்து 34 மலேசியர்கள் உட்பட பலர் இதில் பங்கேற்கின்றனர். ட்ரோன் தாக்குதல் உட்பட பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட போதிலும் அவர்கள் தளராமல் தொடர்கின்றனர்.

இந்தப் பணியை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடு மலேசியாவாகும்; அன்வார் முழு ஆதரவை அளித்துள்ளார் என்று நஷ்ருல் கூறினார்! –

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *