இஸ்ரேலில் விடுவிக்கப்பட்ட மலேசியர்கள் இன்று நாடு திரும்புகிறார்கள்!
- Shan Siva
- 07 Oct, 2025
கோலாலம்பூர், அக் 7: இஸ்ரேலால் கைது செய்யப்பட்டு, சமீபத்தில் விடுவிக்கப்பட்ட 23 மலேசிய குளோபல் சுமுத்
ஃப்ளோட்டிலா தன்னார்வலர்களும் இன்று இரவு வீடு திரும்ப உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு இன்று காலை இஸ்தான்புல்லில் இருந்து புறப்பட்டு
இரவில் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசன் புலெட்டின்
உட்டாமாவிடம் இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார். இதற்கிடையில், மனித உரிமைகள் ஆராய்ச்சி மற்றும் ஆதரவு மையத்தின் (மைய)
வழக்கறிஞர் ஃபஹ்மி அப்த் மொயின், அனைத்து
தன்னார்வலர்களும் நல்ல நிலையில் உள்ளனர், வீடு திரும்பத் தயாராக உள்ளனர் என்று தெரிவித்தார்.
ஆர்டெல் ஆர்யனா மற்றும் ஹைகல் அப்துல்லா ஆகிய இரு
தன்னார்வலர்கள் தொடர் சிகிச்சை பெற்றுள்ளனர். ஆர்டெல் தோள்பட்டை கிழிந்த நிலையிலும், அதே நேரத்தில் ஹைகலுக்கு கட்டைவிரல் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும்
அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



