தாய்லாந்திலிருந்து மலேசியர்கள் மீட்பு! அனைத்து குழுக்களுக்கும் அன்வார் நன்றி
- Shan Siva
- 28 Nov, 2025
கோலாலம்பூர், நவ 28: தெற்கு தாய்லாந்தில் வெள்ளம் காரணமாக சிக்கித் தவித்த 6,000க்கும் மேற்பட்ட மலேசியர்கள் மீட்புப் பணிகளுக்குப் பிறகு மலேசியா திரும்பியுள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
தாய்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன் கூடுதலாக, விஸ்மா புத்ராவுடன் இணைந்து அணிதிரட்டப்பட்ட கிட்டத்தட்ட 20 மலேசிய தன்னார்வ அமைப்புகள் இந்த பணிக்கு பெருமளவில் ஆதரவளித்ததாக அன்வார் கூறினார்.
வெள்ளத்தைத் துணிந்து எதிர்கொண்டு சக மலேசியர்களைக் காப்பாற்ற ஆபத்துகளை எதிர்கொண்ட நமது தன்னார்வக் குழுக்களின் தைரியம் மற்றும் அர்ப்பணிப்பால் தாம் மிகவும் நெகிழ்ச்சியடைந்ததாகவும், எங்கள் ஹீரோக்களுக்கு எனது அதிகபட்ச பாராட்டுகளும் வணக்கமும் செலுத்துகிறேன் என்றும் அவர் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஹத் யாய் நகரில் சிக்கித் தவித்த 36 மாணவர்கள் மற்றும் இரண்டு பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு உதவுவதில் உதவி மற்றும் ஒருங்கிணைப்புக்காக வெளியுறவு அமைச்சகம், தாய்லாந்தில் உள்ள மலேசிய தூதரகம், சோங்க்லாவில் உள்ள மலேசிய துணைத் தூதரகம், தாய் அதிகாரிகள், உள்ளூர் மீட்புக் குழுக்கள் மற்றும் யுனிவர்சிட்டி உத்தாராப் மலேசியா நிர்வாகத்திற்கும் அன்வார் நன்றி தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



