வியூக பங்காளித்துவத்தை ஊக்குவிக்க மலேசியாவும், பிரேசிலும் எம்ஓயூவில் கையெழுத்து!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, அக். 26-

முக்கியமான துறைகளில் இருவழி உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்காக, பிரேசிலும் மலேசியாவும் நேற்று பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (எம்ஒயூக்கள்) கையெழுத்திட்டன. குறைக்கடத்தி தொழில்நுட்பம், அறிவியல், புதிய கண்டு பிடிப்பு மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் வியூக பங்காளித்துவத்தை வலுப்படுத்திக் கொள்வதும் அவற்றில் அடங்கும்.

புத்ராஜெயாவில் உள்ள ஸ்ரீ பெர்டானா வளாகத்தில் நேற்று சனிக்கிழமை நடந்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தக் கையெழுத்துச் சடங்கில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பிரேசிலிய அதிபர் லூயிஸ் இனாசியே லுல்லா டி செல்வாவும் கலந்து கொண்டனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் 47 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லூயிஸ் இனாசியோ கோலாலம்பூர் வந்துள்ளார். முதல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸஃப்ருல் அஸிஸும் பிரேசிலின் மேம்பாடு, தொழில்துறை, வர்த்தகம் மற்றும் சேவைத்துறை துணை அமைச்சர் மார்சியோ ஃபெர்னாண்டோ இலியாஸ் ரோசாவும்
கையெழுத்திட்டனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டில், லத்தின் அமெரிக்கா நாடுகள் மத்தியில், மலேசியாவின் இரண்டாவது மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக பிரேசில் இருந்தது. அக்காலகட்டத்தில் இவ்விரு நாடுகளுக்கும் இடையில் மொத்தம் 2,036 கோடி வெள்ளி மதிப்பில் வர்த்தகம் நடந்திருந்தது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *