1 MDB ஊழல் வழக்கில் RM 30 பில்லியனை மலேசியா மீட்டுள்ளது! - MACC
- Shan Siva
- 27 Aug, 2025
கோலாலம்பூர், ஆக 27: 1 MDB ஊழல் தொடர்பான பணத்தில்
இருந்து RM30 பில்லியன் ரிங்கிட் மீட்கப்பட்டுள்ளதாக, மலேசிய லஞ்ச ஊழல்
தடுப்பு ஆணையமான MACC-யின் 1MDB சொத்து மீட்புப் பணிக்குழு
தெரிவித்துள்ளது. 1MDB ஊழல் வழக்கில், முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட RM42 பில்லியன் தொகையில், இது சுமார் 70% என்பது குறிப்பிடத்தக்கது.
இது, உலகளாவிய ஊழல் வழக்குகளை ஒப்பிடும்போது, மிக அதிகம் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளின் பங்காளிகளுடன்,
மலேசிய
நிறுவனங்கள் மேற்கொண்ட ஒத்துழைப்பால் இந்தச் சாதனை சாத்தியமானது என்று MACC பண மோசடி தடுப்புப் பிரிவின் இயக்குநர் Datuk Mohamad Zamri Zainul Abidin தெரிவித்தார்.
உள்நாட்டுச் சொத்துக்களில் 90லிருந்து 95% ஏற்கெனவே மீட்கப்பட்டுள்ள
நிலையில், Jho Low , Tarek
Obaid, Patrick Mahony போன்ற வெளிநாட்டு
நபர்களுடன் தொடர்புடைய சொத்துக்களை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று
வருகின்றன என்று அவர் கூறினார்.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் RM2.27 பில்லியன் சம்பந்தப்பட்ட 1MDB குற்றவியல் வழக்கு, அக்டோபர் மாதம்
மீண்டும் தொடங்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



