அமெரிக்க நாணயக் கண்காணிப்பு பட்டியலில் மலேசியா நீக்கம்! - மகிழ்ச்சியுடன் ஏற்கிறோம்
- Shan Siva
- 16 Nov, 2024
கோலாலம்பூர், நவம்பர் 16: அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள டொனால்டு டிரம்ப், எத்தகைய வரிகளை விதிப்பார் என்பது பற்றி இப்போதே கருத்துரைக்க முடியாது என்று பேங் நெகாரா மலேசியா ஆளுநர் அப்துல் ரஷிட் காஃபூர் நேற்று தெரிவித்தார்.
ஆயினும்,
இவ்வாண்டின் மூன்றாவது காலாண்டில் வலுவான
வளர்ச்சி அம்சங்களால் நாடு தற்போது ஒரு சிறப்பான நிலையில் உள்ளது. என்று அவர்
குறிப்பிட்டார். மலேசியாவின் வலுவான
வளர்ச்சிக்கு வர்த்தகம், முதலீடு, சுற்றுலாச் செலவினம் போன்றவை ஆதாரக் கூறுகளாக உள்ளன.
அந்த அம்சங்கள் அடுத்தாண்டு முழுவதிலும். மட்டுமல்லாது 2026ஆம் ஆண்டிலும்
நீடித்திருக்கும்.
மலேசியாவின்
பொருளாதாரம் தொடர்ந்து சாதகமான நிலையிலேயே இருந்துவரும் என்று ரஷிட் சொன்னார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.3 விழுக்காடாகப் பதிவாகி உள்ளது என்பதை
அறிவிப்பதற்காக நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
அண்மைய அதிபர்
தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் பல வாக்குறுதிகளை அளித்தார். அமரிக்கா என்னென்ன
கொள்கைகளை அறிவிக்கப் போகிறது என்பதைக் காண அனைவரும் ஆர்வமுடன்
காத்திருக்கின்றனர். எனவே, இப்போதைக்கு மத்திய வங்கியான பேங்க் நெகாரா
எந்த ஊகங்களையும் தெரிவிக்க விரும்பவில்லை. தகுந்த நேரத்தில் துல்லியமான
மதிப்பீட்டை நாங்கள் வெளியிடுவோம் என்றார் அவர்.
அமெரிக்காவின்
நாணயக் கண்காணிப்புப் பட்டியலிலிருந்து மலேசியா நீக்கப்பட்டிருப்பதை தாம்
மகிழ்ச்சியுடன் வரவேற்பதாகவும் அவர் கூறினார். நிங்கிட்டின் மதிப்பு சந்தை நிலைக்கேற்றபடி
இருப்பதை இது உறுதி செய்கிறது என்று அவர் சுட்டிக் காட்டினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *