அமெரிக்காவின் வரி விதிப்பு-மலேசியாவின் நம்பிக்கை இன்னும் தளரவில்லை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 10-

மலேசியாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள வர்த்தக வரிகள் ஆகஸ்டு முதல் தேதி நடப்புக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், மேல் பேச்சுவார்த்தையின் மூலம் அதற்குச் சாதகமான தீர்வுகள் கிடைக்கலாம் என்று டத்தோஸ்ரீ தெங்கு ஸஃப்ருல் அப்துல் அஸிஸ் நேற்று நம்பிக்கை தெரிவித்தார்.

இதில் ஆறுதலளிக்கும் விஷயம் என்னவென்றால், ஆகஸ்டு முதல் தேதியன்றுதான் புதிய வரிகள் நடப்புக்கு வருகின்றன. இதனால், மேல்பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நமக்குப் போதுமான காலஅவகாசம் உள்ளது என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சருமான ஸஃப்ருல் குறிப்பிட்டார்.

அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதித்துவத் தூதர் ஜேமிசன் லீ கிரீயரிடம் நான் தொடர்பு கொண்டு பேசினேன். வியாழக்கிழமையன்று காணொளி வாயிலாக பேச்சு நடத்துவதற்கு அவர் இணக்கம் தெரிவித்தார் என்றும் ஸஃப்ருல் கூறினார்.அன்றைய தினமே அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்திக்கவுள்ளார். அச்சந்திப்பில் நானும் கலந்துகொள்வேன் என்றார் அவர்.

அப்பேச்சுவார்த்தையின்போது தேசிய நலன்கள், இறையாண்மை போன்ற முக்கிய விவகாரங்களில் மலேசியா உறுதியுடன் இருக்கும் என்று நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஸஃப்ருல் கூறினார்.அரசாங்கத்தின் கொள்முதல் கொள்கைகள், இலக்கவியல் சட்டங்கள், இலக்கவியல் வரிவிதிப்பு போன்றவை அப்பேச்சுவார்த்தையில் சர்ச்சைக்குரிய விஷயங்களாக உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

Malaysia yakin isu cukai import Amerika Syarikat yang bakal berkuat kuasa Ogos ini dapat diselesaikan melalui perbincangan. Menteri MITI, Tengku Zafrul berkata rundingan dengan wakil AS akan diadakan, Malaysia akan tegas pertahan kepentingan negara dan isu-isu berbangkit.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *