2030-க்குள் மலேசியா AI நாடாக மாறும்! - உருவாக்கப்படும் AI சுற்றுச்சூழல் அமைப்பு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 17: 2030 ஆம் ஆண்டுக்குள் மலேசியா ஒரு செயற்கை நுண்ணறிவு நாடாக மாறுவதை ஆதரிக்க இலக்கவியல் அமைச்சு அது சார்ந்த ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தயார்நிலையை உறுதி செய்வதற்காக உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் அமைச்சு உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அதன் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ தெரிவித்தார்.

பல தொழில்கள் ஏற்கனவே AI தீர்வுகளைப் பயன்படுத்தி செயல்படுகின்றன என்றும், வரும் ஆண்டுகளில் AI யை ஏற்றுக்கொள்வது கணிசமாக துரிதப்படுத்தப்படும் என்றும் கோபிந்த் குறிப்பிட்டார்.

2025 ஆம் ஆண்டிற்கான அதன் 25.5% மொத்த உள்நாட்டு உற்பத்தி பங்களிப்பு இலக்கை அடைய டிஜிட்டல் பொருளாதார முதலீடுகள் அதிகரிக்கும் என்று நாடு எதிர்பார்க்கிறது.

தற்போதைய கணிப்புகளின்படி டிஜிட்டல் பொருளாதாரத் துறை 2030 ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30% பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *