வியூக மின்னியல் உபரிப்பாகத் தயாரிப்பு தொழில்துறை தளமாக மலேசியா நிலைநிறுத்தப்படும்!
- Muthu Kumar
- 13 Sep, 2025
கூச்சிங், செப். 13-
தென்கிழக்கு ஆசியாவில், ஒரு நிலையான மற்றும் வியூக மின்னியல் உபரிப்பாகத் தயாரிப்பு தொழில்துறை தளமாக. மலேசியா, தொடர்ந்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
உலகம் அதன் விநியோகச் சங்கிலிகளை மறுசீரமைத்து வரும் நிலையில், ஆசியாவில் நீண்டகாலம் நிலைத்திருக்க எதிர்பார்க்கும் நிறுவனங்களுக்கு. நிலைத்தன்மை, ஒரு வியூக இடம் துறை சார்ந்த சலுகைகளை வழங்குவது போன்ற நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
"நான்மிகைப்படுத்தவில்லை. ஆனால், தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலையையும், மலேசியா மற்றும் ஆசியானின் மையத்தன்மையையும் கருத்தில் கொண்டு, அமெரிக்கா, சீனா, ஐரோப்பா, ஆசியா மற்றும் தற்போது லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளையும் ஈடுபடுத்துவதால், நாம் நிலையானவர்களாகவும், மத்தியஸ்தராகவும், அனைத்து நாடுகளுடனும் ஈடுபடத் தயாராகவும் காணப்படுவதற்கு சிறந்த நிலையில் இருக்கிறோம்." என்றார் அவர்.
புதிய தொழில்துறை பிரதானத் திட்டம், நிம்ப் 2030, தேசிய மின்னியல் உபரிப்பாகத் தயாரிப்பு தொழில்துறை வியூகம், என்.எஸ்.எஸ் ஆகியவை அரசியல் நடுநிலைமை, முக்கிய துறைகளில் வட்டார தலைமைத்துவத்தின் பொருளாதார போட்டித்தன்மை உட்பட மின்னியல் உபரிபாகத் தொழில்துறையை முன்னுரிமையாகக் கொண்டுள்ளன என்றும் பிரதமர் கூறினார்.
கோலாலம்பூரில் நடைபெறும் 47ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில், மலேசியா தனது மின்னியல் உபரிப்பாகத் தயாரிப்பு தொழில்துறை வியூகத்தை முன்னிலைப்படுத்தும் என்றும், இது வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதையும், மேம்பட்ட உற்பத்தி, நுண் மின்னணுவியலில் அதன் வளர்ந்து வரும் திறன்களைக் காண்பிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் விவரித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



