மலாக்கா டிஏபி ராஜினாமா: பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை – முதல்வர் அப்துல் ரவூப் யூசோ
- Shan Siva
- 16 Jul, 2026
கோலாலம்பூர், ஜூலை 16: மலாக்கா மாநில அரசில் இருந்து விலகிய டிஏபி சட்டமன்ற உறுப்பினர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை என்று மாநில முதல்வர் அப் ரவூப் யூசோ தெரிவித்துள்ளார்.
டிஏபி மாநில அரசிலிருந்து விலகுவதாக அறிவித்த செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்கள் ஏற்கனவே மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டன என்றார்.
பிரதமர் அன்வார் இப்ராஹிம் பேச்சுவார்த்தை நடத்துமாறு கேட்டபோதும், ராஜினாமா கடிதங்கள் ஏற்கனவே கிடைத்துவிட்டதால் அது இனி சாத்தியமில்லை என்று தெரிவித்ததாக அப் ரவூப் கூறினார்.
ராஜினாமா செய்தவர்களில், தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் அலெக்ஸ் சீ, துணை சபாநாயகர் கெர்க் சீ யீ, மற்றும் துணை ஆட்சிக்குழு உறுப்பினர்களான லோ சீ லியோங் மற்றும் லெங் சாவ் யென் ஆகியோர் அடங்குவர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



