போயிங் விமானங்களை வாங்க வேண்டாம் அரசாங்கத்திற்குப் பாலஸ்தீன ஆதரவாளர்கள் கோரிக்கை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 28-

போயிங் விமானங்களைக் கொள்முதல் செய்யும் திட்டத்தை ரத்து செய்யும்படி பாலஸ்தீனத்திற்கு ஆதரவான அரசு சாரா இயக்கங்களின் கூட்டமைப்பொன்று அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்துவரும் இஸ்ரேலுடன் போயிங் தொடர்பு வைத்திருப்பதால் அந்நிறுவனத்துடனான இதர ஒப்பந்தங்களை ரத்து செய்யும்படியும் அந்தக் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.

கஸானா நேஷனல் பெர்ஹாட்டின் துணை நிறுவனமான மலேசியா ஏவியேஷன் குழுமம் முப்பது போயிங் விமானங்களை வாங்குவதற்கு அண்மையில் இணக்கம் தெரிவித்தது. பாலஸ்தீனர்களின் உரிமைகளை ஆதரித்து வரும் நமது அரசாங்கத்தின் நீண்ட கால கொள்கைக்கு இது முரண்பாடாக உள்ளது என்று அந்த கூட்டமைப்பு தெரிவித்தது.

ஆக்கிரமிப்பாளர்களான இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விநியோகம் செய்துவரும் ஒரு நிறுவனத்தின் (போயிங்) நிதிவளத்தை அதிகரிக்கும் வேலையை ஒருபுறம் செய்துகொண்டு மறுபுறம் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இருக்கிறோம் என்று மலேசியா கூறிவருவதில் அர்த்தம் இல்லை என்று பிடிஎஸ் தலைமையிலான அரசு சாரா அமைப்புகள் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளன.

மலேசியா ஏவியேஷன் குழுமம் முப்பது 737ரக விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு முன்பதிவு செய்துள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த வெள்ளிக்கிழமை ஃபயர்பிளை ஆகிய விமான நடத்திவரும் கொள்முதல் செய்யப்படவுள்ள முப்பது விமானங்களில் பதினெட்டு விமானங்கள் போயிங் 737-8 ரகத்தையும் பன்னிரண்டு விமானங்கள் போயிங் 737-10 ரகத்தையும் சேர்ந்தவை ஆகும். அவ்விமானங்கள் அனைத்தும் வரும் 2030ஆம் ஆண்டுக்குள் மலேசியாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விற்பனை செய்துவரும் போயிங் நிறுவனத்திடம் விமானக் கொள்முதல் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது மலேசியாவின் நம்பகத்தன்மையைப் பாதிக்கச் செய்யும் என்றும் அந்தக் கூட்டமைப்பு கூறிக்கொண்டது.

Gabungan NGO pro-Palestin mendesak kerajaan membatalkan pembelian pesawat Boeing kerana syarikat itu mempunyai hubungan dengan Israel. Mereka menyatakan bahawa pembelian ini bercanggah dengan dasar kerajaan yang menyokong Palestin dan boleh menjejaskan kredibiliti Malaysia di peringkat antarabangsa.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *