ஹார்மூஸ் ஜலசந்தி வழியே அனைத்து வர்த்தக கப்பல்களும் செல்ல அனுமதி: ஈரான் அறிவிப்பு
- Surendran Sumdraraj
- 15 May, 2026
உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக அனைத்து வர்த்தக கப்பல்களும் மீண்டும் செல்ல அனுமதிக்கப்படுவதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. சமீப மாதங்களில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக இந்த கடல் வழித்தடத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தன.
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி வெளியிட்ட தகவலின்படி, வர்த்தக கப்பல்கள் தற்போது ஈரான் கடல்சார் அதிகாரிகள் அறிவித்த பாதுகாப்பு வழித்தடங்களைப் பின்பற்றி செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து மீண்டும் சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக உலகின் மொத்த எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 20 சதவீதம் நடைபெறுவதால், இந்த அறிவிப்பு சர்வதேச சந்தைகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



