என் காலை நக்குகிறார் சவூதி இளவரசர் -டொனால்ட் டிரம்ப்!
- Muthu Kumar
- 29 Mar, 2026
ஈரானுக்கு எதிரான போர் தீவிரமடைந்துள்ள சூழலில், சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
புளோரிடாவில் நடைபெற்ற முதலீட்டு மன்றத்தில் பேசிய டிரம்ப், சவூதி இளவரசர் தன்னைத் தவறாக மதிப்பிட்டுவிட்டதாகவும், தற்போது அவர் தன்னிடம் மிகவும் பணிவாக (தன் காலை நக்கும் அளவிற்கு) நடந்து கொள்வதாகவும் தமக்கே உரிய பாணியில் கிண்டலாகக் குறிப்பிட்டார். அமெரிக்கா ஒரு பலவீனமான நாடாக இருக்கும் என்று இளவரசர் நினைத்த நிலையில், தற்போது அது உலகிலேயே சக்திவாய்ந்த நாடாக மீண்டெழுந்துள்ளதை அவர் ஆச்சரியத்துடன் பார்ப்பதாக டிரம்ப் பெருமிதம் தெரிவித்தார்.
இருப்பினும், அடுத்த சில நிமிடங்களிலேயே தனது தொனியை மாற்றிக்கொண்ட டிரம்ப், சவூதி இளவரசரை ஒரு “அற்புதமான மனிதர்” மற்றும் “சிறந்த போர்வீரர்” என்று புகழ்ந்து தள்ளினார். ஈரானுக்கு எதிரான போரில் சவூதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய வளைகுடா நாடுகள் அமெரிக்காவிற்கு உறுதுணையாக நின்று போரிடுவதை அவர் சுட்டிக்காட்டினார். ஒரு மாதத்தை எட்டியுள்ள இந்த ஈரானுடனான போரில், வளைகுடா நாடுகளின் பங்களிப்பு மிக முக்கியமானது என்பதை அவர் இந்த உரையின் மூலம் உறுதிப்படுத்தினார்.
அதே சமயம், ஈரானுடனான போர் முடிவுக்கு வரும்போது எட்டப்படும் ஒப்பந்தங்கள் குறித்து வளைகுடா நாடுகள் அமெரிக்காவிற்குத் தெளிவான நிபந்தனைகளை விதித்துள்ளன. ஈரானின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் திறன்களை நிரந்தரமாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை ஈரான் இனி ஒருபோதும் அச்சுறுத்தக் கூடாது என்றும் அவை வலியுறுத்தியுள்ளன.
தொடர்ச்சியான தாக்குதல்களால் ஈரானுடன் இராஜதந்திர உறவைத் தொடர வழியில்லை எனக் கருதும் வளைகுடா நாடுகள், தங்களின் பாதுகாப்பு மற்றும் எண்ணெய் கப்பல் வழித்தடங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வலுவான ஒப்பந்தத்தை வாஷிங்டனிடம் இருந்து எதிர்பார்க்கின்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



