செம்பனை தோட்டக் கொலை... இருவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
- Shan Siva
- 04 Feb, 2026
ஜொகூர் பாரு, பிப் 4: கடந்த ஆண்டு கங்கார் பூலாய் செம்பனைத் தோட்டத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், இரண்டு சகோதரர்கள் இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.
ஆர். அரசன் (32) மற்றும்
அவரது சகோதரர் ஆர். உதெஸ் (36) ஆகியோர், மாஜிஸ்திரேட்
நபிலா நிஜாம் முன்னிலையில் ஆஜரானனர். குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, அதை புரிந்துகொண்டதாக அவர்கள் தலை அசைத்தனர். ஆனால், எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
2025 செப்டம்பர் 15 அன்று
அதிகாலை 12.30 மணி முதல் 4 மணி
வரை, கங்கார் பூலாய் பனைத் தோட்டத்தில் உள்ள வீட்டில்,
வி. தமிழ்ச் செல்வன் (28) என்பவரை
கொலை செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு குற்றச் சட்டம் பிரிவு 302
மற்றும் 34ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள்
வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். மரண தண்டனை விதிக்கப்படாவிட்டால், குறைந்தது 12 பிரம்படிகள் வழங்கப்படும்.
பிரேதப் பரிசோதனை, விஷவியல் மற்றும் டிஎன்ஏ அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட
வேண்டியுள்ளதால், வழக்கு ஏப்ரல் 6க்கு
ஒத்திவைக்கப்பட்டது. ஜாமீன் வழங்கப்படவில்லை.
இந்த இருவரும், கங்கார்
பூலு செம்பனைத் தோட்டத்தில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு
குடும்பம் உட்பட ஆறு பேரின் மனித எச்சங்கள் தொடர்பான வழக்கில் முக்கிய சந்தேக
நபர்களாக உள்ளனர்.
கடந்த மாதம் இந்த கொடூர சம்பவம்
வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, நாடு
முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



