மூளைக்கு புற்றுநோய் பரவியதால் மருத்துவமனையில் ஜமால் யூனோஸ்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 28 -

சிலாங்கூரின் சுங்கை பெசார் அம்னோ தலைவர் ஜமால் யூனோஸின் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருக்கிறது. அவருக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோய் மூளைக்கு பரவி இருப்பதை டாக்டர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

தற்போது அவர், அம்பாங்கில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பெரித்தா ஹரியான் நேற்று செய்தி வெளியிட்டது. “எம்ஆர்ஐ சோதனை செய்யப்பட்ட பின்னர், எனது நுரையீரலில் பரவியிருந்த புற்றுநோய் தற்போது எனது மூளைக்குப் பரவி இருப்தை டாக்டர்கள் கண்டு பிடித்துள்ளனர். அது 3 செண்டி மீட்டர் அளவுக்கு ஒரு கட்டியாக வளர்ந்திருக்கிறது” என்று ஜமால் கூறியதாக பெரித்தா ஹரியான் தெரிவித்தது.

வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தபோது முதலில் கழுத்திலும் தலையிலும் வலி ஏற்பட்டதாக அவர் கூறினார்.நான்காவது நிலை நுரையீரல் புற்றுநோய் மீண்டும் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பரில் பிரின்ஸ் கோர்ட் மருத்துவ மையத்தில் ஜமால் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Kesihatan Ketua UMNO Sungai Besar, Jamal Yunos, merosot apabila kanser paru-parunya merebak ke otak. Doktor mengesan ketumbuhan 3cm selepas imbasan MRI. Beliau kini menerima rawatan di hospital swasta di Ampang selepas mengalami sakit kepala dan leher ketika di rumah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *