முடிந்தால் அரசாங்கத்திலிருந்து வெளியேறி பாருங்கள்! அம்னோவுக்கு அமானா சவால்!
- Thinagaren Sanggaren
- 04 Jan, 2026
ஜனவரி 4,
ஒற்றுமை கூட்டணியிலிருந்து அம்னோ வெளியேறுவதால் எந்தவொரு பயனும் இல்லை என்றும் முடிந்தால் முதலில் மலாக்கா மாநிலத்திலிருந்து வெளியேறுங்கள் என மலாக்கா மாநில அமானா தலைவர் Ashraf Mukhlis Minghat அம்னோவுக்குச் சவால் விடுத்துள்ளார். ஒற்றுமை அரசாங்கத்தில் மலாய் இஸ்லாமியர்கள் பாதுகாக்கப்படவில்லை என அம்னோவின் இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால் சலே குற்றம் சாட்டுவது பொறுப்பற்ற செயல் என்றும் மலாய்க்காரர்களின் நலனில் ஒற்றுமை அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்துவதால் பாதுகாப்பு அமைச்சு, கிராமப்புற மேம்பாடு, அனைத்துலக வர்த்தக அமைச்சு, முதலீடு அமைச்சு, தோட்டத்துறை அமைச்சு, உயர்கல்வி அமைச்சு, கல்வி அமைச்சு என தலைமையில் இருப்பவர்கள் எல்லோரும் மலாய்க்காரர்கள் இல்லையா என Ashraf Mukhlis Minghat கேள்வி எழுப்பினார்.
கடந்த 3 ஆண்டுகளாக அம்னோ அரசாங்கத்தின் முக்கிய தலைமை பொறுப்புகளில் இடம்பெற்றுள்ளது. மலாய்க்காரர்களுக்கான அனைத்து நலத்திட்டங்களையும் செயல்படுத்தும் தலைமை பொறுப்புகளில் அம்னோ இருக்கிறது. அப்படியானால் செயல்பட வேண்டியது அம்னோ தானே என Ashraf Mukhlis Minghat கேள்வி எழுப்பினார். மலாய்க்காரர்கள் ஒற்றுமை அரசாங்கத்தில் ஒதுக்கப்படுவதாக அக்மால் கருத்து தெரிவிக்கிறார். அனால் அக்மாலும் ஆட்சியில் இருக்கும் ஒரு மலாய்காரர். அப்படியானால் அவர் அரசு நலத்திட்டங்களை முன்னெடுக்க யார் தடுக்கிறார்கள் என Ashraf Mukhlis Minghat கேள்வி எழுப்பினார்.
உண்மையிலேயே அம்னோ ஒற்றுமை கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்கிற முடிவில் இருக்குமே என்றால் முதலில் மலாக்காவில் பெரும்பான்மையில் ஆட்சி அமைத்திருக்கும் பாரிசான், பக்காத்தானை ஆட்சியிலிருந்து நீக்குங்கள் என மலாக்கா மாநில அமானா கட்சித் தலைவர் Ashraf Mukhlis Minghat வெளிப்படையாக அம்னோவுக்குச் சவால் விடுத்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



