சபா சட்டமன்றத் தேர்தலில் அமானா கட்சி போட்டியிடும்! - MAT SABU
- Thinagaren Sanggaren
- 20 Jul, 2025
ஜூலை 20,
வரவிருக்கும் சபா மாநிலச் சட்டமன்றத்தேர்தலில் அமானா கட்சி போட்டியிடும் என அமானா கட்சியின் தலைவரும் அமைச்சருமான MAT SABU உறுதியளித்தார். பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலானக் கூட்டணியில் அமானா கட்சி 5 சட்டமன்றங்களில் போட்டியிடும் என்றும் போட்டியிடவிருக்கும் சட்டமன்றங்களை அமானா கட்சியின் தலைமை அடையாளம் கண்டிருப்பதாகவும் MAT SABU தெரிவித்தார்.
சம்மந்தப்பட்ட 5 சட்டமன்றங்கள்
குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும்
இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இரண்டு சட்டமன்றங்கள்
உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் மேலும் 3 சட்டமன்றங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள்
நடத்தப்பட்டு வருவதையும் MAT SABU சுட்டிக்காட்டினார். கோரப்படும் சட்டமன்றங்களுக்குப் பதிலாக மற்ற
சட்டமன்றங்கள் வழங்கப்பட்டால் போட்டியிடுவது குறித்து அமானா கட்சி மேல் பரிசீலனை
செய்யும் என அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



