ஈஷா மையத்தில் சமந்தாவுக்கு இரண்டாவது திருமணம்!

top-news
FREE WEBSITE AD

நடிகை சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்திருந்தார். சில வருடங்கள் மட்டுமே வாழ்ந்த அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.

இதனையடுத்து சிங்கிளாக இருந்த சாம் இயக்குநர் ராஜ் நிடிமோருவை காதலிப்பதாக தகவல்கள் பரவிய நிலையில் இன்று கோவை ஈஷா யோகா மையத்தில் அவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் ராஜுடைய முதல் மனைவி ஷ்யாமிலி போட்டிருக்கும் இன்ஸ்டா போஸ்ட் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இந்நிலையில் ராஜு நிடிமோருவுக்கும் சமந்தாவுக்கும் இன்று கோவையில் இருக்கும் ஈஷா யோகா மையத்தில் வைத்து இரண்டாவது திருமணம் நடந்திருக்கிறது. ரகசியமாக நடந்த இந்தத் திருமணத்தில் இரண்டு பேருக்கும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். விரைவில் திருமணம் தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமந்தாவுக்கும், ராஜ் நிடிமோருவுக்கும் திருமணம் நடந்திருக்கும் சூழலில் ராஜுடைய முதல் மனைவி ஷ்யாமிலி போட்டிருக்கும் இன்ஸ்டா போஸ்ட் ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது. அவர் தனது ஸ்டோரியில், "விரக்தியானவர்கள் விரக்தியான செயலை செய்வார்கள்" என்ற மைக்கேல் புரூக்ஸின் கூற்றினை வைத்திருக்கிறார். இது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியிருக்கிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *