மலேசியாவில் 6 மாநிலங்களுக்குத் தொடர் மழை எச்சரிக்கை
- Tamil Malar (Reporter)
- 17 Nov, 2025
செய்தி - வெற்றி மைந்தன்
கோலாலம்பூர், நவ. 17-
மலேசிய வானிலை ஆய்வுத் துறை வருகிற புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து பெய்யக்கூடிய கனமழைக்கு எதிராக ஆறு மாநிலங்களுக்கு மஞ்சள் நிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாதிக்கப்படும் மாநிலங்களும் பகுதிகளும் பின்வருமாறு:
- பெர்லிஸ் (முழு மாநிலமும்)
- கெடா (முழு மாநிலமும்)
- பினாங்கு (முழு மாநிலமும்)
- பேராக் (கெரியான், லாருட் மாத்தாங் செலாமா, ஹுலு பேராக், கோலா கங்சார் பகுதிகள்)
- கிளாந்தான் (முழு மாநிலமும்)
- திரெங்கானு (பெசுட், செத்தியு, கோலா நெருஸ், ஹுலு திரெங்கானு, கோலா திரெங்கானு, மாராங் பகுதிகள்)
இந்தத் தொடர் மழையால் வெள்ள அபாயம், நிலச்சரிவு, போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானில ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக மலைப்பாங்கான பகுதிகளிலும், கடற்கரையோர மாவட்டங்களிலும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, வானிலை முன்னறிவிப்புகளை தொடர்ந்து கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவசர நிலையில் 999 அல்லது உள்ளூர் பேரிடர் மீட்புக் குழுவைத் தொடர்பு கொள்ளவும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



