சாலை வரி கட்டவில்லை; லம்போகினி பறிமுதல்!
- Shan Siva
- 25 Apr, 2026
கோலாலம்பூர், ஏப் 25: பெர்லிஸ் சாலைப் போக்குவரத்துத் துறை , சமீபத்தில் ஜாலான் கோலா பெர்லிஸ்-சாங்லுன் பகுதியில் மேற்கொண்ட தினசரி சோதனைகளின் போது, 23லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள லம்போர்கினி ரெவுல்டோ ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றைப் பறிமுதல் செய்தது.
சோதனையின் போது, அந்த வாகனத்தின் மோட்டார் வாகன உரிமம் காலாவதியாகிவிட்டதையும், அதற்குக் காப்பீடு செய்யப்படவில்லை என்பதையும் கண்டறிந்ததை அடுத்து, அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதாக பெர்லிஸ் JPJ இயக்குநர் நொரைனி நவி கூறினார்.
இந்த ரெவுல்டோ காருக்கான சாலை வரி, ஆண்டுக்கு 10,000 முதல் 12,000 ரிங்கிட் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் முதல் பெர்லிஸ் JPJ-ஆல் பறிமுதல் செய்யப்பட்ட ஆறு சொகுசு வாகனங்களில் இந்தக் காரும் ஒன்றாகும் என்று நொரைனி ஹரியான் மெட்ரோவிடம் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



