ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: 7 பேர் பலி; 9 பேர் படுகாயம்

top-news
FREE WEBSITE AD

தெஹ்ரான், ஜூலை 17:

ஈரானின் ஹர்முஸ்கன் மாகாணத்தில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர். இதனால் அமெரிக்கா–ஈரான் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்து, மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

ஈரான் மீது தொடர்ந்து ஆறாவது நாளாகத் தாக்குதல் நடத்திய அமெரிக்கா, ஹர்முஸ்கன் மாகாணத்தின் துறைமுக நகரமான பண்டர் இ ஹமீர் பகுதியில் உள்ள பாலத்தைக் குறிவைத்ததாகக் கூறப்படுகிறது. தாக்குதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் முக்கிய எண்ணெய் மற்றும் சரக்கு வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹர்முஸ் ஜலசந்தியை மூடப்போவதாக ஈரான் அறிவித்ததைத் தொடர்ந்து, அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது. ஹர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்கு மற்றும் கச்சா எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகக் கூறப்படும் நிலையில், ஈரானைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *