தமிழ் மலர் செய்தியாளர் தி.ஆர். மேத்யூஸுக்கு டிஜேஎன் விருது!

top-news
FREE WEBSITE AD

ஜோர்ஜ்டவுன், ஜூலை 26-

பினாங்கு ஆளுநர் டத்தோஸ்ரீ உத்தாமா ஹாஜி ரம்லி ஙா தாலிப்பின் 84 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பினாங்கு மாநில தமிழ் மலர் செய்தியாளர் தி.ஆர்.மேத்யூஸ் டிஜேஎன் எனும் உயரிய விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்ப்பத்திரிகைத் துறையில் நீண்டகாலம் பணியாற்றி வரும் மேத்யூஸ் அரசியல்,சமூகம்,
சமயம் சார்ந்த துறைகளைத் தொட்டு பல்வேறு செய்திகளை வழங்கி வருபவராவார்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக எழுத்துத் துறையிலும் பத்திரிகைத் துறையிலும் ஈடுபட்டு வரும் அவர், பினாங்கு மாநிலம் மட்டுமல்லாது வட மாநிலத்தில் நடக்கும் செய்திகளையும் எழுதி வருகிறார்.

சமுதாய இயக்கங்களிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு செயலாற்றி வரும் மேத்யூஸூக்கு மாநில ஆளுநரின் இந்த விருது அவரின் பத்திரிகைத் துறை வேவைக்கு மிகச் சிறந்த அங்கீகாரமாகும்.
அவருக்கு தமிழ் மலர் குடும்பத்தினர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *