கே கே பி கம்போங் டிராலிக் வட்டார தந்தையர் தினம் ஒன்று கூடும் நிகழ்வு!
- Muthu Kumar
- 20 Jul, 2025
தொழிலாளர் கூட்டுறவு நாணயச் சங்கம் சித்தியவான் தொடர்பு குழுவின் கீழ் இயங்கும் கம்போங் டிராலிக் வட்டாரத்தின் ஏற்பாட்டில்
தந்தையர் தின ஒன்று கூடும் நிகழ்வு டிராலிக் பாலர் பள்ளி மண்டபத்தில் மிகச் சிறப்பான வகையில் நடந்து முடிந்தது.
அந்நிகழ்வில் குறைந்த வருமானம் கொண்ட முதியோர்களுக்கும் அன்றாட தேவைகளுக்கான உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டது போற்றுதலுக்குரியது. அதனை முறையே மலேசியா எழுத்தாளர் சங்க செயலாளரும் மேனாள் ஆசிரியை சாந்தா வட்டார செயலவை உறுப்பினர் கமலாதேவி ஆகியோர் அன்பளிப்பு செய்தனர். வட்டார தலைவர் விஜயனும் அதில் பங்கெடுத்துக்கொண்டு அன்பளிப்பு வழங்கினார்.மேனாள் வட்டாரத் தலைவர் ஜெகாவிற்கு சிறப்பு செய்யப்பட்டது.
சித்தியவான் தொடர்பு குழு ஒருங்கிணைப்பாளர் பி சின்னையா, தலைவர் மணி, செயலாளர் ரவிதேவன், துணைத்தலைவர் சண்முகநாதன், துணைச்செயலாளர் பி முனுசாமி, மகளிர் அணி தலைவி ஜி. விஜயா மற்றும் வட்டாரப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்ட இந்நிகழ்விற்கு சிறப்பு வருகை புரிந்து சிறப்புரை வழங்கினார் அமைப்பின் தேசிய தலைவர் நா. சுபட தங்கராஜ்.
முற்றிலும் பெண்களைக் கொண்டு துவங்கப்பட்ட வட்டாரம் கம்போங் டி லிக் என்றால் அது மிகை ஆகாது அப்போதே சரித்திரம் படைத்த வட்டாரம் இன்றும் பெண் பொருளாளரே சேவையாற்றுவது பாராட்டுக்குரியது. இன்னும் கேகேபி குடும்பத்தில் சேராத உறவுகளை ஒன்றிணையுங்கள். நமது ஐந்தாண்டு திட்டத்திற்கு உரமூட்டுங்கள் என்றார் நிகழ்வை அருமையாக வழி நடத்தி நன்றி கூறி முடித்து வைத்தார் நிகழ்ச்சி நெறியாளர் சாந்தா.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



