கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு- சுல்தானின் நிலைப்பாட்டுக்கு அன்வார், ஹம்சா ஆதரவு!
- Muthu Kumar
- 19 Sep, 2025
கோலாலம்பூர், செப். 19-
கோலாலம்பூரின் கம்போங் சுங்கை பாரு நிலத்தை மறுமேம்பாடு செய்யும் திட்டத்தில் மலாய்க்காரர்களின் முன்னுரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சிலாங்கூர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ்ஷா விடுத்துள்ள அறைகூவலைத் தாங்கள் ஆதரிப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும், எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஸைனுடினும் நேற்று தெரிவித்தனர்.
சுல்தானின் கோரிக்கையை வரவேற்கிறேன். வரலாற்றுப் பூர்வ சொத்துகளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அதே வேளையில், மேம்பாட்டுப் பணிகளும் நியாயமானதாக இருக்க வேண்டும் எனும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப சுல்தானின் ஆலோசனை அமைந்துள்ளது என்று அன்வார் குறிப்பிட்டார்..
இதனிடையே, சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள மலாய்க்காரர்களின் கவலையையும் ஆதங்கத்தையும் சுல்தானின் அந்த அறைகூவல் உணர்த்துகிறது என்று ஹம்சா
குறிப்பிட்டார்.
பெரிக்காத்தான் நேஷனலைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடும் இதுதான் என்றார் அவர். கம்போங் கங்கை பாருவில் உள்ள 37 வீடுகளில் வசித்துவரும் மக்களை வெளியேற்ற இம்மாதம் 11ஆம் தேதியன்று அதிகாரிகள் முற்பட்டனர். ஆனால், பதினான்கு வீடுகளின் உரிமையாளர்கள் அங்கிருந்து வெளியேற மறுத்தனர். அதனால் அங்கு கைகலப்பு நடைபெற்றது. அந்தக் கைகலப்பின்போது டாங் வாங்கி போலீஸ் தலைவர் சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான் ரத்தக் காயங்களுக்கு ஆளானார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



