PN புதிய தலைவராக சம்சூரி தேர்வு!
- Shan Siva
- 16 May, 2026
கோலாலம்பூர், மே 16: பெரிகாத்தான் நேஷனல் தலைவர் அஹ்மத் சம்சுரி மொக்தார் புதிய எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கூட்டணியின் உச்ச மன்றம் இந்த முடிவை எடுத்ததாக அதன் பொதுச்செயலாளர் தக்கியுதீன் ஹசான் கூறினார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிக் குழுவை வழிநடத்தும் பொறுப்பை கெமாமான் நாடாளுமன்ற உறுப்பினரான அவரிடம் ஒப்படைக்க மன்றம் ஒப்புக்கொண்டதாக தக்கியுதீன் கூறினார்.
திரெங்கானு மந்திரி பெசாராகவும் இருக்கும் சம்சுரி, எதிர்க்கட்சியின் வியூகத்தை ஒருங்கிணைத்து, நாடாளுமன்ற விவாதங்கள் மற்றும் முக்கிய தேசிய கொள்கை கலந்துரையாடல்களில் எதிர்க்கட்சிக் குழுவை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரிக்காத்தான் நேஷனல் உடன் பொதுவான நலன்களைப் பகிர்ந்து கொள்ளும் கட்சிகளுடன் தேர்தல் உடன்படிக்கைகளை உருவாக்க ஒப்புக்கொள்வது உட்பட, பரந்த அரசியல் ஒத்துழைப்பு குறித்தும் மன்றம் விவாதித்ததாக தக்கியுதீன் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



