பெர்சாத்து கட்சியின் தேர்தல் இயக்குநராக ஹம்சா ஜைனுதீன் நியமனம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 17: பெர்சாத்து துணைத் தலைவர் ஹம்சா ஜைனுதீன் கட்சியின் தேர்தல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பெர்சாத்து உச்ச மன்றத்தின் அண்மைய கூட்டத்தின் போது இந்த நியமனம் செய்யப்பட்டதாக பெர்சாத்து உச்ச மன்ற உறுப்பினர் வான் சைபுல் வான் ஜான் தமது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

பெர்சாத்து பொதுச் செயலாளர் அஸ்மின் அலியின் கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட ஜூலை 15 தேதியிட்ட அறிக்கையையும் அவர் இணைத்துள்ளார். ஆனால் ஹம்சாவின் நியமனம் பற்றி அவர் குறிப்பிடவில்லை.

பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் துன் பைசால் இஸ்மாயில் அஜீஸ், ஹம்சாவின் நியமனத்தை உறுதிப்படுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *